மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி எனும் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த மார்ச் 26-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வின்போது தன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கு, மாணவர் ஒருவர் பார்த்து எழுதுவதற்கு தனது விடைத்தாளை காட்ட மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மூன்று சக மாணவர்கள் தேர்வு முடிந்து அறையில் இருந்து வெளியே வந்தவுடன், விடைத்தாளைக் காட்ட மறுத்த மாணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் ஆத்திரத்தில் மூன்று மாணவர்களும் அந்த மாணவரை அடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இரு மாணவர்கள் அந்த மாணவரைச் சுற்றிவளைத்துப் பிடித்துக்கொள்ள, மற்றொரு மாணவர் அவரைக் கத்தியால் குத்தி உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து உயிருக்குப் போராடிய மாணவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அந்த மாணவன் சிகிச்சை முடிந்து, பாதுகாப்பாக வீடு திரும்பியிருக்கிறார்.
குற்றம்சாட்டப்பட்ட மூன்று மாணவர்கள்மீது பிவாண்டி பகுதியில் உள்ள சாந்தி நகர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments