பிக்மீ நிறுவனத்தின் NANA PAHANA திட்டத்தின் கீழ் பிக் மீ நிறுவனத்தில் பதிவு செய்த முச்சக்கர வண்டி சாரதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.
பிக்மீ நிறுவனத்தின் வடமாகாண விநியோக உரிமையை பெற்றுள்ள ரதி ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தை மாதம் முதல் இது வரையில் வடக்கில் சுமார் 4ஆயிரத்து 500 சாரதிகளை பிக் மீ நிறுவனத்தின் கீழ் இணைத்து , சாரதிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது.
அந்நிலையில் பிக்மீ நிறுவனத்தின் NANA PAHANA திட்டத்தின் கீழ் , பிக் மீ நிறுவனத்துடன் இணைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றை தினம் இடம்பெற்றது.
நிகழ்வில் வடமாகாண முகவரான Rathee Event Management உரிமையாளர் அமிர்தலிங்கம் தவதீசன், PickMe நிறுவன முகாமையாளர் ராஜேந்திரன் ஜெசிந்தன், ஊடக பிரதாணி கனகலிங்கம் சபேஷ் மற்றும் PickMe சாரதியார் ஒன்றியம் தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
No comments