யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கடத்தல் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை காரைநகர் பகுதிக்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , வீடு திரும்பிய இளைஞனை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் ஒன்று கணவன் - மனைவியை கடத்தி சென்று கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்திருந்தது.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து ஐவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது
அதேவேளை கடத்தல் சம்பவம் இடம்பெற்ற வேளை கடற்படை முகாமில் கடமையில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments