ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார்.
69 ஆவது வயதான அவர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கே.எச்.நந்தசேனவின் வெற்றிடத்திற்கு எம்.ஜி.வீரசேன நியமிக்கப்படவுள்ளார் எனத்தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments