முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்று முல்லைதீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டபோதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் மனித உரிமைகள் சட்டத்தரணி கே. ரீ. நிரஞ்சன் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி கே. வாசுதேவா மாவட்ட செயலக கணக்காளர் காணாமல் போனவர்களுக்கான அலுவலக பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர் .
இதன் போது மாவட்ட செயலக பிரதிகளால் குறித்த அகழ்விற்குரிய நிதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என மன்றில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிதி தொடர்பான விடயங்களுக்காக இவ்வழக்கானது எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments