யாழ்ப்பாணத்தில் தீடிரென மயங்கி விழுந்த ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியை சொந்த இடமாக கொண்டவரும் , தற்போது சங்கானை பகுதியில் வசித்து வருபவருமான நடேசு ஜெயபானுஜன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மகன் உயிரிழந்த தகவல் அறிந்து தாயார் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் ,உயிரிழந்துள்ளார்.
மகன் உயிரிழந்து விட்டார் என்பதை அறிந்ததும் தாயார் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் , யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி, தொகுப்பாளராகவும் , ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments