கொழும்பு அளுத்மாவத்தை வீதியில், சுற்றுலா செல்லவிருந்த பஸ்ஸொன்று இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை திடீரென தீ பற்றி எரிந்ததில் பஸ் முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சுற்றுலா செல்லவிருந்த பஸ்ஸொன்றே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது.
குறித்த பஸ்ஸின் சாராதியும் நடத்துனரும் தேநீர் அருந்துவதற்காக வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments