குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நெடுந்தீவில் நடைபெற்றன.
நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு குறிகாட்டுவான் பகுதியை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.
குறிகாட்டுவான் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குமுதினி படகை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்து, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 36 பேரை வெட்டி படுகொலை செய்தனர். ஏனையோர் கடும்காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
No comments