வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்க நகையை கொள்ளையடித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வாதுவ பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்க நகையை நபர் ஒருவர் கொள்ளையடித்து தப்பி செல்ல முற்பட்ட வேளை பிரதேச மக்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்
அதன் போதே குறித்த நபர் ,அப்பிரதேச பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜெண்ட் தர பொலிஸ் உத்தியோகஸ்தர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments