Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்துவேன்


கடந்த காலங்களில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரித கெதியில் முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்பிடம் தான் வலியுறுத்துவேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி அளித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

  யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அதனை ஈபிடிபி செய்தது என எம் மீது பழியை போட்டு விடுவார்கள்.  தற்போது ஈபிடிபி யின் பெயரை பாவிப்பதில்லை.

கடந்த காலங்களில் வன்முறைமீது நாட்டம் கொண்டவர்கள் உயிராபத்தை ஏற்படுத்தி , அதனை ஈபிடிபியின் மீது போட்டு எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர் என தெரிவித்தார். 

அதன் போது, கடந்த காலங்களில் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கிடப்பில் உள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் சுட்டிக்காட்டிய போது, 

குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்து , வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் வலியுறுத்துவேன் என தெரிவித்தார். 

No comments