Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் சாதித்த மாணவிக்கு கௌரவிப்பு - வீடியோ இணைப்பு


க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

மாணவி கல்விகற்ற பாடசாலையான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியரகள்,  சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

ஊரவர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் கல்விமான்கள் என பலர் மாணவிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் பல்வேறு பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஊடகங்கள் வாயிலாக மாணவியின் சாதனையை பார்வையிட்ட புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் குறித்த மாணவிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதுடன், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவர் துவிச்சக்கர வண்டியையும் வழங்கி வைத்தார். அதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மாணவியிடம் கையளித்தார்.

குறித்த மாணவி மிகவும் வறுமை கோட்டுக்குட்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கல்வி கற்பதற்கு வீட்டில் ஒரு மேசை கூட இல்லாத நிலையில் வெற்று தரையில் இருர்தே கல்வியினை கற்று இந்த நிலையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மாணவியின் உறவினர்கள், ஊரவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்









No comments