யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் , அதன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் - கைதடி வீதியில் , உரும்பிராய் சந்திக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை மற்றுமொரு முச்சக்கர வண்டி முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சாரதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments