கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் மாங்குளத்தில் விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்த ஹயஸ் ரக வாகனம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், முன்னே சென்ற கனரக வாகனத்தினை முந்தி செல்ல முற்பட்ட வேளை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நால்வரையும் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்
ஏனைய மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , மாங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments