Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எங்கள் அரசியல் எழுச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.


தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது தாக்குதல் நடாத்திய அனைவரையும் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

வீடியோ :- https://www.facebook.com/share/v/W3XWsbg4C7cUPspS/

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று இன்றைய தினம் சனிக்கிழமை தாக்குதல் நடாத்தி இருந்தது. 

தாக்குதலில் பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களை வைத்தியசாலைக்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு  தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் கூட்டணி இந்த அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. மக்களின் அமோக ஆதரவு பெருகி வருகின்றது. எங்களின் எழுச்சியை பொறுக்க முடியாத தரப்பு எங்கள் மீது தொடர்ச்சியாக அழுத்தங்களை உபயோகித்து வருகின்றார்கள் 

நேற்று முன்தினம் வியாழக்கிழமை  எமது வேட்பாளர் உள்ளிட்ட இருவரை பருத்தித்துறை பொலிஸார் சட்டவிரோதமாக கைது செய்தனர். இன்று எங்கள் அணியினர் கரந்தன் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை காட்டுமிராண்டி தனமாக  தாக்கப்பட்டுள்ளனர். இதெல்லாமே எமது கட்சியை மாத்திரம் இலக்கு வைத்து நடத்தப்படுகிறது 

எங்கள் அரசியல் எழுச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. எந்த தடை ஏற்பட்டாலும் அதனை தாண்டி செல்வோம். 

பெண்கள் ஆண்களை ரவுடி கும்பல்கள் துரத்தி துரத்தி அடிப்பது என்பது இந்த சமுதாயத்தில் முன்னர் நடந்திருக்காத மிக மோசமான காட்டுமிராண்டி தனமாகும். இதொரு கேவலமான அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை. 

கோப்பாய் பொலிஸார் இந்த தாக்குதலாளிகளை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

அவர்களுக்கு பின்னால் புலனாய்வாளர்களோ அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும். இதொரு பாரதூரமான தேர்தல் வன்முறை இதற்கு எதிராக நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என தெரிவித்தார். 


No comments