Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

டக்ளஸை சந்தித்த முருகன்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். 

முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால்  திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றை வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

அவரை இலங்கைக்கு மீள அழைத்து வர அப்போது கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை இவருடன் கைது செய்யப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த போதே கடந்த  பெப்ரவரி மாதம்  நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments