வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால், பிரதேச செயலக ரீதியாக பாதுகாப்பு நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு என்பவற்றுக்காக ரூபா.11 மில்லியனும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அவசர திருத்தப் பணிகளுக்காக ரூபா 1 மில்லியனும் விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
No comments