Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா? - யாழில் போராட்டம்


யாழ். கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்   ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “NPP அரசே தகுதயற்ற புதிய தலைவர் நியமனத்தை உடனடியாக ரத்துச் செய், பனை தறித்த காசுதான் ஊழியர்களின் ஊதியமா?, நிர்வாக திறன் அற்ற பதில் பொதுமுகாமையாளரை உடனடியாக பதிவி நீக்கம் செய்,  NPP அரசே செல்வினின் பதவி நீக்கத்திற்கு தகுந்த காரணம் கூறு, அண்ணன் பதில் முகாமையாளர் ஊழலை மறைக்க தங்கை உள்ளக கணக்காய்வாளர்,

 பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா?, ஊழலற்ற அரசின் தலைவர் நியமனம் இதுவா? 

என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதிவியேற்ற பின்னர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக செல்வின் நியமிக்கப்பட்டார். 

அவர் தனது கடமைகளை பெறுப்பேற்று சில தினங்களின் அவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக விநாயகமூர்த்தி சகாதேவன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








No comments