Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜே.வி.பி யினரையும் வைத்தியரையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்


ஜே.வி.பி யினர் வைத்தியர் அருச்சுனா போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு ஏற்றவர்கள் அல்ல அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 21 இல் லாந்தர் சின்னத்தில் போட்டியிடும் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வீடியோ :- https://www.facebook.com/tamilnews1.lk/videos/1755455491686629

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

எமக்கானவர்கள் என்று நினைத்து வாக்களித்தவர்கள் எமது அரசியல் பொருளாதார நம்பிக்கையை பொய்யாக்கி விட்டனர். எங்கள் மக்கள் தமிழ் அரசியல் வாதிகளையும் அரசியலையும் வெறுக்க தொடங்கியுள்ளார்கள். 

அதன் விளைவாக மக்களோடு மக்களாக நின்ற நாம் சுயேட்சை குழுவாக களமிறங்கியுள்ளோம். செய்ய முடியாத , கட்டுக்கதைகளை கூறி நாங்கள் அரசியல் செய்ய வரவில்லை. 

தமிழ் அரசியல் வாதிகள் மீதான மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

யாழ் . தேர்தல் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அருச்சுனா என்பவர் தகுதியற்றவர். தமிழ் மக்களின் பாரம்பரியம் கலாச்சார விழுமியங்களை கேள்விக்கு உட்படுத்தி வருகின்றார். தமிழ் மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும். 

அதேபோல வடக்கு கிழக்கில் ஜேவிபி யினரையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் இவர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்கு ஏற்றவர்கள் அல்ல என மேலும் தெரிவித்தார். 

No comments