எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 தொடர்பில் ”மணியுடன் பேசுவோம்" என்ற சிறப்பு கருத்தாடல் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் ராஜா சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
மாற்றத்திற்கான இளைஞர் அணியின் ஒழுங்கமைப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணனை ஆதரித்து இடம்பெற்ற இக்கருத்தாடல் நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட் ட இளைஞர்கள், முதியவர்கள் , பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள் பலரும் தமது ஆதரவை தெரிவித்து பங்கு கொண்டதுடன் எதிர்கால அரசியல் குறித்த விடயங்களை அறிந்தும் தெரிந்தும் கருத்துக்களை முன்வைத்து கேள்வி பதில் அமர்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments