Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மழை காரணமாக யாழில். 2 ஆயிரத்து 294 பேர் பாதிப்பு - 20 வீடுகள் சேதம்


யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக 610 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. 

யாழ் . மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் பதிவாகிய பாதிப்புக்களே அவை என மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை , யாழ் . மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இனம் கண்டு , அவற்றை அடையாளப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் , இடர்நிலை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளோருக்கு சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட செயலர் ம. பிரதீபனால் பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 




No comments