Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றமல்ல


தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலில் பயணிப்பவர்களை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

வீடியோ :- https://www.facebook.com/tamilnews1.lk/videos/1262687011742875

மேலும் தெரிவிக்கையில், 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை கட்சிக்கு வாக்களியுங்கள் என கோரியவர்கள். ஒரு மாதத்தில் அந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் எமது சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பிதற்றி வருகின்றனர். 

சுயேட்சைகள் மாத்திரமல்ல , கட்சிகள் கூட தென்னிலங்கை அரசியல் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவும் ,  சலிகைகளுக்காகவும் , பதவிகளுக்காகவும் நிற்பவர்களை மக்கள் சரியாக இனம் கண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும். 

தெற்கில் ஏற்பட்ட மாற்றம் எமக்கான மாற்றமல்ல. தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயற்படுவர்களை இனம் கண்டு வாக்களிக்க வேண்டும். 

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தெற்கு மாற்றத்தினை பார்த்து மயங்காது. தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த  வேண்டும் என தெரிவித்தார்.  


No comments