எனக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியை சுற்றி , தமிழ் தலைவர்கள் , போராட்ட இயங்களின் தலைவர்களின் உருவ சிலைகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளேன்.
புலிகளால் எனது சகோதரன் கடத்தப்பட்டு , காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். என்னுடன் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆனாலும் எனக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை. அனைவருக்கும் சிலை வைக்க ஏற்பாடு செய்வேன். தற்போது நிதி பற்றாக்குறை காரணமாகவே சிலை நிறுவும் பணி தடைப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் அதன் பணிகளை முன்னெடுப்பேன் என மேலும் தெரிவித்தார்.
No comments