யாழ்ப்பாணம் நகர பகுதியில் UCMAS புதிய கிளை இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பிக்க பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகரத்திற்கான கிளை யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மைதானத்தின் அருகில் வட மாகாண பிரதி பிரதம செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாதனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம் மற்றும் Robotics சிறுவர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
அதன் நிர்வாக இயக்குனர் தயானா சந்துரு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் UCMAS International போட்டியில் கலந்து கொள்ள இந்த மாதம் டெல்லி செல்ல இருக்கும் மாணவர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
இந்த கிளையை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய போட்டியில் பல சாம்பியன்களை பெற்றது குறிப்பிடதக்கது.
No comments