Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் இருக்க முடியாது


சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அரசியலமைப்பின் 12(1) பிரிவின் பிரகாரம் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். 

கடந்த காலங்களில் நீதிமன்றத்துக்கு நடந்து செல்லும் அரசியல்வாதி, நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறையில் இருக்க வேண்டும். அதனை விடுத்து வைத்தியசாலைகளில் சுகபோகமாக இருக்க முடியாது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர் அரசியல் அணுசரணையுடன் வைத்தியசாலையில் இருப்பதாக  குறிப்பிடப்பட்டது. 

எவருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. ஒருசில கைதிகள் பல மாதகாலமாக வைத்தியசாலையில் இருப்பது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

மேலும்  ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் இலாபத்துக்காக க்ளீன் ஸ்ரீ லங்கா  திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். 

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்களும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்தி எமக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கமைவாகவே செயற்படுவோம். என தெரிவித்தார்.

No comments