எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் வியட்நாமில் உலக தமிழர் மாநாடு நடைபெற இருக்கிறது என பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ் சங்கத்தின் சார்பாக உலகத்தமிழர் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இதற்கு முன்னர் 2018 இல் கம்போடியாவில் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்தியிருந்தோம்.
இப்பொழுது வியட்நாமில் இரண்டவாது மாநாட்டை தனாங் நகரில் 21, 22 ஆம் திகதிகளில் நடாத்தவுள்ளோம். தமிழர்களுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான உறவு என்பது பல்லாயிரமாண்டு நெருங்கிய தொடர்பை கொண்டது.
அந்தத் தொடர்பின் அடிப்படையில் வியட்நாமில் நாங்கள் இரண்டு பிரிவாக மாநாட்டை நடத்தவுள்ளோம். முதலாம் நாள் உலகத் தமிழர் மாநாடாகவும் இரண்டாம் நாள் உலகத் தமிழர் வணிக மாநாடாகவும் நடைபெறவுள்ளது.
40ற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளன்ர். உலகெங்கும் இருந்தும் தமிழ் பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை நிபுணர்கள், அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் என பலரும் இதில் பங்கேற்கவுள்ளனர் - என்றார்.
No comments