யாழ்ப்பாணத்தில் 104 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இரண்டு படகுகளில், யாழ்ப்பாணம் உதயபுரம் கடற்கரை பகுதிக்கு கஞ்சா போதைப்பொருள் கடத்தி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போது , இரண்டு படகுகளில் கஞ்சாவை கடத்தி வந்த உதயபுரம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 104 கிலோ கஞ்சா போதைப்பொருளை மீட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments