Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதிர்க் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் !


பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் பலமான பாராளுமன்ற நடவடிக்கைகளை கொண்டமைந்த பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் பக்கம் நாம் முன்நிற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற குழுக்களில் கவனம் செலுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இங்கு சகல கட்சித் தலைவர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்து சுட்டிக்காட்டினர்.

கடந்த ஜனவரி 29ஆம் திகதியும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடி இதேபோன்ற கலந்துரையாடலொன்றை நடத்தியதோடு, இன்று நடைபெற்ற கலந்துரையாடலும் இதன்  தொடர்ச்சியாகும்.

இக்கலந்துரையாடலில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக்க (எதிர்க்கட்சியின் பிரதம கொறடா), ஜே.சி. அலவதுவல (எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்), அஜித் பி. பெரேரா (எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்), ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், பி. சத்தியலிங்கம், அமிர்தநாதன் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், வீ.எஸ். இராதாகிருஷ்ணன், அனுராத ஜயரத்ன, டி.வீ.சானக மற்றும் காதர் மஸ்தான் முதலானோர் கலந்துகொண்டனர்.




 

No comments