பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஜாஸ்மின் அரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில், EDUS Tutor ஆன்லைன் கல்வி நிறுவனம் (www.edustutor.com) ஒரு புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
தேசிய புதுமை அறிக்கை 2024 (National Innovation Report 2024) என்பது, 2018 முதல் 2023 வரை நாட்டில் ஏற்பட்ட 106 முக்கியமான கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் ஒரு முக்கிய ஆவணம் ஆகும். இந்த அறிக்கையில் வடக்கு இலங்கையில் இருந்து தேர்வான ஒரே ஸ்டார்ட்அப் நிறுவனம் EDUS Tutor ஆகும்.
இந்த அறிக்கையை தேசிய புதுமை நிறுவனம் (NIA) பேராசிரியர் அஜித் டி. அல்விஸ் தலைமையில் வெளியிட்டது . விழாவில், EDUS Tutor நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுஜீவன் வெற்றிவேலாயுதம் அறிக்கையின் பிரதியை நிறுவனம் சார்பாக பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், ஜனாதிபதி செயலாளர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர், சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் மற்றும் நாட்டின் முன்னணி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல புதிய தேர்வுசெய்யப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு, இலங்கையின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்கினர்.
EDUS Tutor, கடந்த அக்டோபர் மாதம் 2024-ல் நடைபெற்ற தேசிய ICT விருது வழங்கும் விழாவில் (EdTech) கல்விசார் பிரிவில் தேசிய விருதினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இது எங்கள் கல்வி புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அரசாங்கம் மற்றும் தேசிய புதுமை நிறுவனத்தின் (NIA) உறுதிப்பாட்டை காட்டுகிறது.
கல்வி முறைகளில் புதிய நல்ல மாற்றங்களை உருவாக்கி, EDUS Tutor ஆன்லைன் கல்வி உலகில் மேலும் உயரங்களை எட்ட, முக்கியமான மாற்றங்களை உருவாக்க உறுதியாக செயற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments