10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 10 வலம்புரி சங்குகளை தனது காரில் மறைத்து வைத்து விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற நபரொருவரை கணேமுல்ல பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத ஒருவர் இந்த வலம்புரிகளை தனக்கு எடுத்துச் சென்று விற்கச் சொன்னதாகவும், அந்தக் கோரிக்கையின் பேரில் அவற்றை விற்க கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
No comments