யாழ்.மாவட்டச் செயலகத்தின் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக கோண்டாவில் இராமகிருஷ்ணா மகாவித்தியாலய பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்தார்கள்.
எமது செய்தி குழுவில் இணைய கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்
https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது,
உற்பத்திக் திறன் செயற்பாட்டு நடைமுறையானது வினைத்திறனான செயற்பாட்டிற்கான ஆரம்ப புள்ளி எனவும், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் உற்பத்தித் திறன் செயற்பாட்டில் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளதாகவும், அந்த வகையில் மாவட்டச் செயலகம் ஏற்கனவே தேசிய ரீதியாக முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், பாடசாலை ரீதியான உற்பத்தித் திறன் செயற்பாடுகளின் அவசியத்தினை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
இச் சந்திப்பில் உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, உற்பத்தித் திறன் மாவட்ட இணைப்பாளர் உ. சி. அனுஷியா மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
No comments