Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தையிட்டி விகாரையில் மற்றுமொரு சட்டவிரோத கட்டடம் - கைவிலங்குகளுடன் வந்த பொலிஸார்


யாழ்ப்பாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று , இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டடத்தில் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்றன

அந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், விகாரை வளாகத்தில் மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம் கட்டப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை தையிட்டியில் திஸ்ஸ விகாரை வளாகத்தில் வேறுசில சட்டவிரோதக் கட்டடங்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கடந்த ஆண்டு மே மாதமளவில் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன.

குறித்த செய்திகளுக்கு யாழ் மாவட்டச் செயாளர் மருதலிங்கம் பிரதீபன் மறுப்புத் தெரிவித்திருந்தார். தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும், அவ்வாறான சட்டவிரோதக் கட்டடங்கள் எவையும் இல்லை என்றும் அவர் அக்கால பகுதியில் கூறியிருந்தார்.

ஆனால், இராணுவத்தால் அமைக்கப்பட்டுவந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டங்களே இன்று மத வழிபாடுகளுக்குப் பின்னர் கையளிக்கப்பட்டன.அந்தக் கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்கான மடாலயமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையில் தொடர்ச்சியாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.






No comments