Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தனியார் கல்வி நிலையத்திற்கு மகளை அழைத்து சென்ற தாய் விபத்தில் சிக்கி உயிரிழப்பு


மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்து சென்ற தாய் மீது வாகனம் மோதியதில் , படுகாயமடைந்த தாய் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி , முழங்காவில் பகுதியை சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு பிள்ளையை அழைத்து சென்றுள்ளார். 

தாயும் மகளும் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , அவர்களுக்கு பின்னல் வேகமாக வந்த பட்டா வாகனம் , தாயை மோதி தள்ளி விபத்துக்கு உள்ளானது 

விபத்தில் காயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு, முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் 

யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் 

No comments