Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"செக்கச்சிவந்த இரத்தம்"


உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கிய "செக்கச்சிவந்த இரத்தம்" எனும் சடங்கு நிலை ஆற்றுகை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்களால் திருப்ப காடுகளின் காட்சி பல்வேறு தலைப்புக்களின் கீழ் ஆற்றுகை செய்பட்டுவந்தது . 

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு , அதனை தொடர்ந்து கொரோனா தொற்று நோய் காலம் ஆகியவற்றால் ஆற்றுகை இடைநிறுத்த பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் 06 வருடங்கிளின் பின்னர் செக்கச் சிவந்த இரத்தம் எனும் தலைப்பில் நாடகத்துறை ஆசிரியரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிரதி அதிபரும் நெறியாளருமான ஏ.சி .பிரான்சிஸ் அவர்களின் நெறியாளர் கையில் அரங்கேறியது . 

ஆற்றுகையை தொடர்ந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களால் ஈஸ்டர் பஜனை மற்றும் நடன நிகழ்வுகளும் அரங்கேறியது .

இதேவேளை கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை கல்லூரியின் மாணவனாக குறித்த ஆற்றுகையில் கைப்பாஸ், பரபாஸ், பிலாத்து என பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த கலைஞன் தங்காராஜா சுபாஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொலிஸ் கடமையில் ஈடுபட்டிருந்த பொழுது உயிர்நீத்து இருந்தார் .குறித்த கலைஞரும் இதன் பொழுது நினைவு கூறப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 






No comments