பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்
அனுராதபுரம் விஹாரபலுகம வித்யாராஜா கல்லூரியில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுவனே உயிரிழந்துள்ளான்
சிறுவன் வேறு சில நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குழப்பமடைந்த பசு அங்கிருந்து வீதியில் ஓடியுள்ளது.
அதன் போது, பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, சுமார் 900 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
No comments