Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, July 11

Pages

Breaking News

காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்


காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை  வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு  ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும்,  தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர்.

அந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, தமிழ் மக்கள் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை குழு ஆகியவை கூட்டிணைந்து ,சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசாவை முன் மொழிந்தனர். 

வேறு பெயர்கள் முன் மொழியப்படாததால் , கோவிந்தராசா தவிசாளராக ஏக மனதாக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில், ஆண்டிஐயா விஜயராசா தெரிவானர். 

அதேவேளை , சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டே ஆதரவு வழங்க உடன்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

செம்மணி மனித புதைகுழியை சர்வதேச நிபுணர்களை அழைத்து வந்து ஆய்...

யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை ஆணிக்கட்டைகள் வீசி மட...

35 வருடங்களின் பின் புதிய சித்திர தேரில் மயிலிட்டி கண்ணகி அம...

இலங்கை அணி அபார வெற்றி

செம்மணிப் புதைகுழி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ?

மன்னாரில் விபத்து - சிறுவன் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்

வீட்டின் ஜன்னலை உடைத்து , உறங்கிக்கொண்டிருந்தவர் மீது துப்பா...

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்க...

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர...

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி - ஒருவர் கைது