நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதாகவும், எரிபொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த வாரத்தில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலக சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 79.27 டொலர்களாக காணப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 68.13 டொலர்களாக வீழ்ச்சியடைந்தது.
தற்பொழுது உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 66.36 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆனால் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரசபை மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் ஆட்சி பொறுப்பினை ஏற்றதுடன் ஊழலை இல்லாதொழித்து மின் கட்டணத்தை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரசாரம் செய்ததாது.ஆனால் தற்போது மின்சாரக் கட்டணத்தை 15 வீதத்தினால் உயர்த்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.
No comments