செம்மணியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஒன்பதாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 42 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இதுவரையில் 37 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
No comments