Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி


1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, நடராசா தங்கவேல் (தங்கத்துரை), செல்வராசா யோகச்சந்திரன்(குட்டிமணி), கணேசானந்தன் ஜெகநாதன்(ஜெகன்) செல்லத்துரை சிவசுப்பிரமணியம் (தேவன்) ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், சமத்தவக் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.







No comments