யாழ்ப்பாணத்தில் ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்த வர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுன்னாகத்தை சேர்ந்த சிவஞானம் சிவகுமார் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டு கிணற்றடியில் ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி நிலத்தில் சரிந்துள்ளார்.
வீட்டார் உடனடியாக அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
அதனை அடுத்து, உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
No comments