கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் , தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments