Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். சுருட்டு பற்ற வைக்க முயன்ற போது ஆடையில் தீ பற்றியமையால் முதியவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் 95 வயது முதியவர் சுருட்டு பற்ற வைக்க முயன்ற போது , ஆடையில் தீ பற்றியமையால் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மானிப்பாய் பகுதியை சேர்ந்த மா. சின்னமணி (வயது 95) என்பவரே உயிரிழந்துள்ளார். 

முதியவர் கடந்த 26ஆம் திகதி தனது வீட்டில் , சுருட்டினை பற்ற வைக்க முயன்ற போது , தீ குச்சி ஆடையில் பட்டு , தீ பற்றியதில் படுகாயமடைந்த முதியவரை வீட்டில் இருந்தோர் சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments