யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட தபால் புகையிரதம் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அருகில் இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்தது.
அதன் காரணமாக கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் சுமார் 3 மணி நேர தாமதத்தின் பின்னரே தமது பயணத்தை தொடர்ந்தனர்
காங்கேசன்துறையில் இருந்து நேற்றைய தினம் இரவு 8 மணிக்கு புறப்பட்ட புகையிரதம் கரடிப்போக்கு சந்திக்கு அருகில் இரவு 9.30 மணியளவில் பழுதடைந்தது.
பழுதடைந்த இயந்திரத்தை திருத்த முயன்று , அது பயனளிக்காத நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து சென்ற மற்றுமொரு இயந்திரம் மூலம் தொடருந்து, கொழும்பை நோக்கிப் புறப்பட்டது.
இதனால் பயணிகள் சுமார் 03 மணி நேர கால தாமதத்தின் பின்னரே தமது பயணத்தை தொடர்ந்தனர்.
No comments