யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது.
மல்லாகம் விசலாட்சி வித்தியாலயத்தில் ஆரம்பித்து, காங்கேசந்துறை வீதியூடாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கி யாழ் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை நடைபவனி முன்னெடுக்கப்பட்டது
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலையில் நடைபெற்ற இந்த நடைபவனியில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா. நந்தகுமார் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அதிகாரிகரிகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.













No comments