யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அது தொடர்பாக பங்குதாரர்களுடனான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலர்,
ஏற்கனவே மாவட்ட செயலக மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தில் இரண்டாயிரம் பேர் வரையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து பதிவு செய்துள்ளனர்.
அந்நிலையில் தொழிற்சந்தை நிகழ்வில் கலந்து கொள்ளும் தொழில் வழங்குனர்களின் தேவைப்பாடுகளை கேட்டறிந்து, தொழில் தேடும் இளைஞர் யுவதிகளின் தேவைப்பாடுகளையும் இணைக்கும் தொழிற்சந்தை நிகழ்வு ஆரோக்கியமானதாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், குறித்த தொழிற் சந்தையில் கலந்து கொள்ளும் தொழில்தேடுவோரின் தரவுகளை மாவட்ட செயலக இணையத்தளத்தில் பதிவுசெய்ய ஆலோசனை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மனித வள மாவட்ட இணைப்பாளர் க.கருணாகரன், மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்சந்தை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள பங்குதாரர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்









No comments