யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்திய நடமாடும் சேவையில் ஆயிரத்து 130 பொதுமக்கள் , 14 சேவைகளைப் பெற்றுக் கொண்டார்கள் என மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
நடமாடும் சேவையில் கண் பரிசோதனையினை 523 பேரும், ஆட்பதிவுச் சேவையினை 441 பேரும், மருத்துவ பரிசோதனைச் சேவையினை 442 பேரும், பிறப்பு இறப்பு பதிவுச் சேவையினை 103 பேரும், மத்திய மோட்டார் வாகன போக்குவரத்து சேவையினை 26 பேரும், மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையினை 101 பேரும், ஓய்வூதிய சேவையினை 26 பேரும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகளினை 2 பேரும் காணி தொடர்பான சேவைகளினை 19 பேரும் பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகளினை 10 பேரும் பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 7 பேரும் முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 3 பேரும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 9 பேரும் கிராம சேவையாளர்களால் வழங்கப்படும் சேவைகளினை 2 பேரும் உள்ளடங்களாக1130 பொதுமக்கள் தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொண்டார்கள்
அதேவேளை மாவட்ட செயலர், கண் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனோடு தொடர்பு கொண்ட போது இவ் நடமாடும் சேவையின் மூலமாக 107 பேர் கண்புரை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் இவர்களுக்கான சத்திர சிகிச்சையினை மூன்று வார காலத்துக்குள் இலவசமாக மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார் எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.






No comments