யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி ( Disaster Management Drill) நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டில் விபத்துகள் மற்றும் அனர்த்தங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் திடீரென பலர் அதில் சிக்கிக் கொண்டால் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவர்களுக்கான சிகிச்சையை வழங்க வேண்டும்.
அதற்கான ஆயத்தங்களையும் பயிற்சியும் வழங்குவதற்கான பயிற்சியே நேற்றைய தினம் நடைபெற்றது.
நிகழ்வில் இறுதியில் கலந்துரையாடல் நடைபெற்று எதிர்வரும் காலங்களில் பேரிடர் ஒன்று ஏற்படுகின்ற போது எவ்வாறான முன் ஆயத்தங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
No comments