யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - முச்சக்கர வண்டி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் - ஓட்டுமடம் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளும் , முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ள நிலையில் , மோட்டார் சைக்கிள் ஓட்டி காயங்களுக்கு உள்ளான நிலையில் , அங்கிருத்தவர்களால் மீட்கப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments