யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற தொழில் சந்தையில் 1500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகளின் பங்கு பற்றி இருந்தனர் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது
மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்திய விசேட தொழிற்சந்தை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்ஹவும் , சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே. ஜி. எச். எச். ஆர். கிரியல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேலை வாய்ப்பு இன்றியிருக்கும் இளைஞர் யுவதிகளை தொழில் வழங்குனர்களையும் இணைக்கும் சந்தர்ப்பமாக தொழிற்சந்தை அமைந்ததாகவும், தொழிற்சந்தை நிகழ்வில் 1500 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டதுடன், தொழில் வழங்கும் 40 நிறுவனங்களும்,15 பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்ததாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
No comments