SLIIT NORTHERN UNI ஆனது பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விண்வெளி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுடன் கூடிய SpaceFest - 2025 கண்காட்சியினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் இருந்து மாலை 4.30 மணி வரை நடாத்தப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இந்தக் கண்காட்சியினை SLIIT NORTHERN UNI இன் வளாகம் 1 (கந்தர்மடம் சந்தி) மற்றும் வளாகம் 2 ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியில் கீழ்வரும் விடயங்கள் உள்ளடங்குகின்றன.
வடமாகாணத்தினைச் சேர்ந்த 250+ பாடசாலை மாணவக்குழுக்களின் சுவரொட்டிக் கண்காட்சி , Internet of Things (IoT) கண்காட்சி , மெய்நிகர் உண்மை (Virtual Reality) அமர்வுகள், Aeronautical கருத்தமர்வுகளும் கண்காட்சியும், மாணவர்களுக்கான புத்தாக்க விளையாட்டுக்கள், விண்வெளி வினாவிடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.






No comments