வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை முதல் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில்,
எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானது வரையான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும். இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டால் கிடைக்கும் மழை என்பதனால் முற்பகலை விடப் பிற்பகலில் அல்லது இரவில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் இடிமின்னலுடன் கூடியதாகவே இந்த மழை கிடைக்கும் - என்றுள்ளது.






No comments